கேரள மாநில பாஜக தலைவர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை அறிக்கை வெளியானது.
அதில் பாஜகவின் கேரள மாநிலத் தலைவராக இருந்த பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் ஆளுநராகவும் லடாக்கின் துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர், ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு, கோவாவின் ஆளுநராக ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் ஆகியோர் பதவி ஏற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்காக ட்ரோன் சோதனை ஓட்டம்!