ETV Bharat / bharat

ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் - தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

author img

By

Published : Jan 20, 2020, 12:44 PM IST

டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

Kejriwal to file nomination today
Kejriwal to file nomination today

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக ஜனவரி 21ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கி தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. காங்கிரஸ் கட்சி நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில், அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை மட்டும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், டெல்லியில் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். மேலும் அவர் சாலையில் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஊர்வலம் வால்மீகி கோயிலில் தொடங்கி ஹனுமன் கோயிலில் முடிவடைகிறது.

மூன்றாவது முறையாக டெல்லி தொகுதியில் போட்டியிடப்போகும் கெஜ்ரிவால், இதற்கு முன்பாக 2013, 2015 ஆகிய ஆண்டுகளிலும் போட்டியிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு 53.46 விழுக்காடு வாக்குகளையும் 2015ஆம் ஆண்டு தேர்தலில் 64.34 விழுக்காடு வாக்குகளையும் பெற்று வெற்றிபெற்றார்.

இதுவரை டெல்லி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்காமல் மௌனம் காத்த பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கெஜ்ரிவாலின் வேட்புமனு தாக்கலுக்குப் பின் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமித் ஷாவின் இடத்தை நெருங்கும் ஜே.பி. நட்டா?

Intro:Body:

Kejriwal to file nomination today

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.