ஜம்மு-காஷ்மீரில் உள்ள கேதர்நாத் பனிலிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான பனிலிங்க யாத்திரை கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கியது.
இதற்காக நாடு முழுவதும் இருந்து 1.85 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். நேற்று மட்டும் 8 ஆயிரத்து 374 பேர் தரிசனம் செய்த நிலையில், இதுவரை 1.82 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 46 நாட்கள் நடைபெறும் இந்த தரிசனம் ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.