காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், சிறார்களை சட்டவிரோதமாகக் காவலில் எடுத்தல், தொலை தொடர்பு வசதிகள் முடக்கப்படுவது ஆகியவை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டது. இன்று இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காஷ்மீர் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், "நிலுவையில் பல வழக்குகள் உள்ளது. அரசியலைப்பு அமர்வு வழக்கான அயோத்தியா வழக்கை தினமும் விசாரிப்பதால் எங்களுக்கு நேரமில்லை. எனவே, காஷ்மீர் தொடர்பான வழக்குகளின் விசாரணை நாளை எடுத்துக் கொள்ளப்படும்" என்றார்.
அரசியலைப்பு சட்டம் 370 நீக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்ந்த இந்த வழக்குகள் நாளை விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.