ETV Bharat / bharat

கர்நாடகாவிலும் சர்ச்சைக்குரிய 'லவ் ஜிகாத்' சட்டம்?

author img

By

Published : Dec 4, 2020, 12:35 PM IST

பெங்களூரு: உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து, கர்நாடகாவில் 'லவ் ஜிகாத்'திற்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

மக்கள் பலர் திருமணம் செய்து கொள்வதற்காக கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாவதாகக் கூறி உத்தரப் பிரதேச அரசின் அமைச்சரவை கடந்த 24ஆம் தேதி கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றியது. இதையடுத்து, திருமணத்திற்காக கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தும் நபர்களுக்கு 50 ஆயிரம் வரை அபராதத்துடன் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி, லவ் ஜிகாத் விவகாரங்களில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களை இஸ்லாமிய ஆண்கள் காதல் செய்து கட்டாயப்படுத்தி மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதாக வலதுசாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர். இதனையே, அவர்கள் லவ் ஜிகாத் என குறிப்பிடுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடகாவில் இச்சட்டத்தை இயற்ற அரசு அலுவலர்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம் குறித்த விவரங்களை சேகரிக்க அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

உடுப்பியில் செய்தியாளர்களை சந்தித்த பசரவாஜ் பொம்மை இதுகுறித்து கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து, ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இச்சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்களும் இதனை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து யோசித்துவருகிறோம். கட்டாயத்தின் பேரில் மதமாற்றம் செய்யப்படுகிறதா அதனை எப்படி உறுதிப்படுத்துவது என்பது குறித்த யோசனையில் உள்ளோம்.

உத்தரப் பிரதேசத்தில் இயற்றப்பட்ட அவசர சட்டத்தின் நகலை கொண்டு அதுகுறித்து ஆராய அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். லவ் ஜிகாத் விவகாரத்தில் மற்ற மாநிலங்கள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்த விவரங்களை சேகரித்துவருகிறோம். லவ் ஜிகாத்திற்கு எதிராக கர்நாடகாவில் கட்டாயமாக சட்டம் இயற்றப்படும். முதலமைச்சர் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.