ETV Bharat / bharat

கல்லூரிகள் அடுத்த மாதம் தொடக்கம்... ஆனால்? - கர்நாடகாவில் கல்லூரிகள் தொடங்குவது எப்போது

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் இருப்பினும் கல்லூரிக்கு மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லை என்றும் அம்மாநிலத்தின் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Karnataka to re-open colleges on November 17

author img

By

Published : Oct 23, 2020, 3:32 PM IST

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

அதேபோல பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்ட அன் லாக் வழிகாட்டுதல்களில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதியளித்தது. மேலும், இது குறித்து மாநில அரசுகள் அங்கிருக்கும் சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம் என்றும் அறிவித்திருந்தது.

இந்தச் சூழலில் கர்நாடகாவில் வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அம்மாநிலத்தின் உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் அஸ்வத்த நாராயணா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பொறியியல் மற்றும் டிப்ளமோ கல்லூரிகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி திறக்கப்படும்.

இருப்பினும், கல்லூரிக்கு மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லை. வேண்டுமென்றால் அவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வழியாகவே பாடங்களை படிக்கலாம். கல்லூரிக்கு வர விரும்பும் மாணவர்கள், பொற்றோர்களிடம் இருந்து கட்டாயம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுள்ளது. மாணவர்கள் விடுதிகளில் தங்குவதையே நாங்கள் விரும்புகிறோம். மாணவர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டால் அரசே அவர்களின் மருத்துவமனை செலவுகளை ஏற்கும்" என்றார்.

மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெளத்தத்தைத் தழுவிய தலித்கள் : காவல் துறையினர் வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.