ETV Bharat / bharat

முதலமைச்சரின் அரசியல் ஆலோசகர் தற்கொலைக்கு முயலுவது சாதாரண விஷயமல்ல - டி.கே. சிவக்குமார் - Yediyurappa's political secretary

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் ஆலோசகர் என்.ஆர். சந்தோஷ் தற்கொலை முயற்சி பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

karnataka-congress-demands-probe-into-alleged-suicide-attempt-by-yediyurappas-political-secretary

author img

By

Published : Nov 28, 2020, 3:58 PM IST

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றிவருபவர் என்.ஆர். சந்தோஷ். இவர் முதலமைச்சர் எடியூரப்பா எங்கு சென்றாலும் உடன் இருப்பவர். இவர் நேற்று காலை எடியூரப்பாவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

பின்னர் நேற்று மாலை திடீரென தனது வீட்டின் அறையில் மயங்கி கிடந்துள்ளார். இவரைத் தூக்கிக்கொண்டு குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் அதிகளவிலான தூக்க மாத்திரைகள் உட்கொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரது உடல்நிலை குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரடியாகச் சென்று விசாரித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இதைப்பற்றி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ''எனக்கு வந்த தகவலின்படி முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் ஆலோசகர் என்.ஆர். சந்தோஷ், ஒரு ரகசிய காணொலியை சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சரிடம் கொடுத்ததாகத் தகவல் கிடைத்தது. அந்தக் காணொலி பாஜகவின் மேலிடத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் காணொலியை வைத்து சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் இருவரும் சேர்ந்து முதலமைச்சர் எடியூரப்பா உள்பட பலரையும் மிரட்டுவதாகத் தெரிகிறது. இது கடந்த பல மாதங்களாக நடக்கிறது.

முதலமைச்சரின் அரசியல் ஆலோசகர் தற்கொலை முயற்சிசெய்வது சாதாரண சம்பவமல்ல; அது முறையாக விசாரணை நடத்தப்படும், அந்த விசாரணை மாநில அரசால் செய்யப்படக் கூடாது'' என்றார்.

இதையும் படிங்க: அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினையை அனுபவித்தே தீர வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.