கர்நாடக மாநிலம் விஜயபுரா நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று காவல்துறை சோதனையில் இருந்த தப்பிக்க முயன்று கர்நாடக அரசுப் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது.
![karnataka accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4624936_344_4624936_1570008944115.png)
இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவரது உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனத்தை எரித்து நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![நொருங்கிய நிலையில் காணப்படும் ஆட்டோ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kn-vjp-03-accident-update-av-7202140_02102019133929_0210f_1570003769_260.jpg)
![விபத்துக்குள்ளான வேன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kn-vjp-03-accident-update-av-7202140_02102019133929_0210f_1570003769_906.jpg)