குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் திங்கட்கிழமை (டிச.9) தாக்கலானது. மசோதா தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (டிச10) நடந்தது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் பதிவாகின.
இந்த நிலையில் குடியுரிமை மசோதா நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்தார். இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் கபில் சிபல், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓ. பிரைன் மற்றும் சமாஜ்வாதி தரப்பில் ராம் கோபால் யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
குடியுரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறினால் அது சட்டமாக்கப்படும்.
இதையும் படிங்க : குடியுரிமை மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்