ETV Bharat / bharat

அரசியலமைப்பு சட்டம்: ஜனநாயகத்தின் விலை மதிப்பற்ற பொக்கிஷம்! - Constitution day

அரசியலமைப்பின் ஒருமைப்பாடே ஜனநாயகத்தின் மைல்கவல், அதில் குடிமக்களே ஆட்சியாளர்கள்.

jewel-of-democracy
jewel-of-democracy
author img

By

Published : Nov 27, 2019, 9:01 AM IST

மனித இனம்தான் பகுத்தறிவுடனும் சக உயிரினத்திற்கு தங்களால் இயன்றவரை தீங்கு விளைவிக்காமலும் வாழ்ந்துவருவதாக நம்பப்படுகிறது. அதிகரித்துவரும் மக்கள் தொகை, குறைந்துவரும் இயற்கை ஆதாரங்கள், அதன் தேவைகள் ஆகியவை மக்களை சுயநலமாக மாற்றுகிறது. இதனால்தான் மக்களிடையே காழ்ப்புணர்ச்சியும் பிரச்னையும் ஏற்படுகிறது.

இந்த அராஜகத்துக்கு முற்றப்புள்ளி வைக்கவும் சமூகங்களுடைய வளரும் சிக்கல்களை சமநிலைப்படுத்தவும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தேவைப்படுகிறது. அதற்குதான் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. நவீன மனித இனம் சமூக உயிரினம் மட்டுமல்ல அரசியல் உயிரினமும் கூட. சமூகமாக ஒரு இடத்தில் வாழ்வதை மனித இனம் வாழ்க்கைக்கான கட்டமைப்பாக மாற்றியது. அதுவே மாநிலமாக உருமாறியது.

அரசின் கட்டமைப்பாக மாநிலம் அமைக்கப்பெற்றது. நிர்வாகம், நீதிமன்ற அமைப்பு, அதிகாரம், செயல்பாடுகள், குடிமக்களின் உரிமை, ஜனநாயக அரசின் கடமை உள்ளிட்டவை அரசியலமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. நாட்டின் அதிகாரத்தை அதுவே வைத்துள்ளது. ஆட்சியாளர்கள், ஆள்பவர்கள் ஆகியோருக்கு இடையேயான உறவை அரசியலமைப்பே ஒழுங்குபடுத்துகிறது.

நாட்டின் அடிப்படை கட்டமைப்பாக அரசியலமைப்பே விளங்குகிறது. அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்கேற்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், நீதித்துறையினர் ஆகியோர் பொதுமக்களுக்காக பொறுப்புடன் செயல்பட வேண்டும். இது ஜனநாயக கட்டமைப்பில் முக்கியமாகக் கருதப்படுகிறது. நிலையான தன்மையை இதற்காகவே அரசியலமைப்பு உருவாக்கியுள்ளது. அரசியலமைப்பின் ஒருமைப்பாடே ஜனநாயகத்தின் மைல்கல்.

ஜனநாயகத்தில், ஆள்பவர்கள், ஆட்சியாளர்கள் என இருவரும் குடிமக்களே ஆவர். அரசை ஒழுங்குபடுத்துவதற்கு அரசியலமைப்பு தேவையா? என்ற கேள்வி இதனால் எழுகிறது. இதற்குப் பதில் ஆம் என்றே சொல்லியாக வேண்டும். கீழ் காணும் ஐந்து முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற அரசியலமைப்பு முக்கிய கருவியாகப் பயன்படுகிறது.

  • அரசின் அதிகாரத்தைக் குறைத்தல்
  • அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து பொதுமக்களைக் காத்தல்
  • காலத்திற்கு ஏற்ப நிகழும் மாற்றங்களை ஒழுங்குபடுத்திச் சகித்துக்கொள்வது
  • ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களை முன்னேற்றுவது
  • சமத்துவமின்மையை நீக்கி சமநிலையை நிலைநாட்டல்

இதனை அடைய அரசியலமைப்பில் சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

உரிய உரிமைகளுடன் பாதுகாத்தல்

அடிப்படை உரிமைகள், மக்களின் சுதந்திரம் ஆகியவற்றை இந்திய அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கிறது. அரசின் அதிகாரத்தை வறையரைப்படுத்துகிறது. சமூக, பொருளாதார நீதியை அடைவதற்கு அரசியலமைப்பு கொள்கைகள் வழிவகை செய்கிறது. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத சுதந்திரம் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுகிறது. மத, கலாச்சாரம் சார்ந்த விவகாரங்களில் அரசு தலையிடுவதற்கு மதச்சார்பின்மை தடை விதிக்கிறது. பலகாலமாக நடைமுறையில் இருந்த தீண்டாமைக்கு அரசியலமைப்பு சட்டப் பிரிவு 17 தடைவிதிக்கிறது. சுதந்திரமான நீதித்துறை நிறுவுவது முக்கிய அம்சமாக உள்ளது.

இந்தியாவில் பின்பற்றப்படும் கூட்டாட்சி முறை

இந்திய அரசியலமைப்பு பெரும்பான்மையாக அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து தழுவப்பட்டிருந்தாலும், அரை கூட்டாட்சி தத்துவத்தையே அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் விரும்பினார்கள். மதத்தின் அடிப்படையில் நாட்டுப் பிரிவினை நடந்தது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிரிவனைவாத கோரிக்கையை முன்வைத்தது ஆகியவற்றால் அரசியலமைப்பில் சில சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வலுவான மத்திய அரசும், பல மாநில அரசுகளும் சேர்ந்ததே கூட்டாட்சித் தத்துவமாகும்.

நாடாளுமன்றத்தின் அடிப்படையில் இயங்கும் அரசு

அதிபர் முறையையும், நாடாளுமன்ற முறையையும் ஆராய்ந்து, நாட்டு மக்களுக்கு நாடாளுமன்ற முறையே சிறந்தது என்ற முடிவுக்கு அரசியலமைப்பை நிறுவியவர்கள் வந்தார்கள். அதிபர் முறையில் ஒரே இடத்தில் அதிகாரம் குவியும். இதனைத் தடுக்க நாடாளுமன்ற முறையில் பல்வேறு படிநிலைக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

கடந்த 70 ஆண்டுகளாக அரசியலமைப்பின் கீழ் இயங்கிய குடிமக்களின் தேவை நிறைவேற்றப்பட்டதா? ஆம், இல்லை என இரண்டும் இதற்கு பதிலாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற பல ஜனநாயக நாடுகள் சர்வாதிகாரத்தின் கீழ் இயங்கிவருகிறது. யூகோஸ்லாவியா, சோவியத் ஒன்றியம், சூடான் போன்ற நாடுகள் உடைந்துவிட்டது. ஆனால், இந்தியா மட்டும் தொடர்ந்து ஜனநாயக நாடாக இருப்பதற்கு காரணம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சில சிறப்பு ஏற்பாடுகள். பிராந்தியம், மொழி, மதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் பிரிந்து கிடப்பது அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றால் காந்தியின் கனவு நிறைவேறாமல் போனது. இதற்கு, நாம் தான் கூட்டாகவும், தனி மனிதராகவும் பொறுப்பேற்க வேண்டும். சமத்துவம், வளர்ச்சி, ஒருமைப்பாடு ஆகியவற்றை கடைப்பிடிப்பது ஒவ்வொருவரின் கடமை.

இதையும் படிகள்: 70 ஆண்டுகளுக்கு பிறகும் அரசியலமைப்பு உயிர்ப்புடன் உள்ளது - பிரகாஷ் அம்பேத்கர் சிறப்புப் பேட்டி

Intro:Body:

Jewel of Democracy

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.