கடன்சுமை, நிதி நெருக்கடியால் ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் முடங்கியுள்ளது. ஏற்கனவே நான்கு மாதங்களாக அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 16 ஆயிரம் ஊழியர்களின் வேலை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் ஜெட்ஏர்வேஸ் விமான ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.