ஜம்மு காஷ்மீர் சோப்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக காவல்துறையினருக்கு நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய ஆயுத காவல் படை, பயங்கரவாத எதிர்ப்பு படையான 52 ராஷ்டிரிய ரைபிள் ஆகியவை இணைந்து அதிரடி சோதனையில் இறங்கியது. அப்போது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சோப்பூர் பகுதியில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த தானிஷ் அகமது கக்ரு என்பது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின்போது அவர் தப்பி செல்ல முயற்சித்தாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் அவர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அகமது கக்ருவிடமிருந்து பயங்கர ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: வீட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை மீட்க ஒன்றிணையுங்கள் - ஃபருக் அப்துல்லா கோரிக்கை