டெல்லியிலிருந்து தனியார் பேருந்து ஒன்று இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்திலுள்ள மணாலிக்கு வந்தது. இந்த பேருந்தை மடக்கி காவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் 2.5 கிலோ கசகசா என்னும் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவலர்கள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 42 வயதான சாகுல் போரோவ் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். போரோவ் சுற்றுலா நுழைவுசீட்டு (விசா) எடுத்து இந்தியா வந்துள்ளார்.
அவர் வாரணாசி, டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றிபார்த்துள்ளார்.
இதையும் படிங்க: தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை