ETV Bharat / bharat

அடிக்கடி விரதம் இருக்கலாமா? -   பேராசிரியர் சீத்தாராம் விளக்கம் - உண்ணாவிரதம்

சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியமா? உடல் இயக்கங்களில் மாறுபாடுகள் ஏற்படுமா? போன்ற சந்தேகங்களுக்கு பேராசிரியர் புலுசு சீத்தாராம் விளக்கம் அளிக்கிறார்.

உபவாசம்
உபவாசம்
author img

By

Published : Aug 20, 2020, 1:33 PM IST

உணவு உண்ணாமல் இருப்பதையே விரதம், உபவாசம், உண்ணாநோன்பு என ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு மாதிரி பெயரிட்டு அழைக்கின்றனர். இறைவனோடு தங்களுக்கு பிணைப்பு ஏற்படுத்திட ஆன்மிக ஈடுபாடு கொண்டோர் இதனை முயன்றாலும், உண்மையில் இது உடலுக்கு நல்லதுதானா? சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியமா? உடல் இயக்கங்களில் மாறுபாடுகள் ஏற்படுமா? என்பது குறித்து திருப்பதி டிடிடி எஸ்.வி.ஆயுர்வேத கல்லூரி பேராசிரியர் புலுசு சீத்தாராமிடம் பேசினோம்.

உடலை சுத்தப்படுத்தும் முறைகளில் பல்வேறு வகையான சிகிச்சைகள் இருந்தாலும்கூட உணவு உண்ணாமல் இருப்பதே பிரதானமாக அறியப்படுகிறது. சாதாரணமாக உண்ணாவிரதம் இருப்பது எவ்வித உணவையும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதைக் குறிக்கிறது. திட உணவு வகைகளைத் தவிர்க்கும் விரதத்தில், திரவ வகையிலான தண்ணீர், பழச்சாறு, மோர் ஆகியவற்றை அருந்தலாம். திட உணவுகளை நீண்ட நேரம் எடுக்கமுடியாதவர்கள், திரவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் intermittent fasting எனப்படும் 'இடைப்பட்ட விரதத்தை' பின்பற்றலாம்.

உடல் பருமனைக் குறைப்பதற்கு இடைப்பட்ட விரதம் பரிந்துரைக்கப்படுகிறது. இதில், இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது வகையில், காலையில் மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய வேளைக்கு காலையில் உண்டதைவிடவும் மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் எவ்வித உணவும் எடுத்துக் கொள்ளவேண்டாம்.

இரண்டாவது வகையில், ஒருவர் முழுமையாகத் திட உணவுகளைத் தவிர்த்து விரதம் இருக்க வேண்டும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இப்படி செய்யலாம்.

'உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்பது உடலை லேசாக உணரச் செய்யும். உடலில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது' என்கிறார் சீத்தாராம்.

பலன்கள்

  1. விரதம் இருப்பது உடலியல் செயலில் ஒன்றாக செயல்படுவதால், உடல் எடையைக் குறைத்து வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
  2. இதயத்தை வலுப்படுத்துவதோடு மூளையின் செயல்திறனை அதிகரிக்கவும் செய்கிறது.
  3. முழு ஈடுபாடோடு விருப்பத்திற்கிணங்க இருக்கும் விரதம் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உள்உறுப்புகளைப் புத்துணா்வாக்கும்.
  4. இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உள்உறுப்புகள் ஒருவர் விரதம் இருக்கும்போது ஓய்வெடுப்பதால், அவை சிறப்பாகச் செயல்படுகின்றன. அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பது ஒரு நபர் நீண்ட காலம் வாழ உதவுகிறது.
  5. அதிகப்படியான சோடியம், வளர்சிதை மாற்றமில்லாதப் பொருட்கள் போன்ற பல்வேறு தீங்கு விளைவிக்கும் பொருள்கள், நம் உடலில் தக்கவைக்கப்படுகின்றன. உடலின் முக்கிய உறுப்புகளுக்கு இடையூறு அளிக்கும் இப்பொருள்களை வெளியேற்ற விரதம் உதவுகிறது.
  6. அடிக்கடி விரதம் இருப்பதால், நினைவாற்றல் அதிகரிக்கிறது. சீரான இடைவெளியில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பது நன்மை பயக்கும்.

ஏன் தவிர்க்க வேண்டும்?

  1. நீடித்த விரதம் தசைகளில் உள்ள புரதச்சத்தைக் குறைத்து, வேறு சில வளா்சிதை மாற்ற சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. இது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
  2. உடலின் ஊட்டச்சத்து குறைவதைக் கண்டறியாமல் அதிகமாக விரதம் இருக்கும் போது கணைய செயல்பாடுகள் முடங்கக்கூடும். இதன் விளைவாக சர்க்கரை அளவு அதிகரிக்கும். இது நாள்பட்ட நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.
  3. உடலில் நிகழும் உயிா்வேதியியல் மாற்றங்களில் வேறுபாடுகளும் ஏற்ற இறக்கங்களும் ஏற்படுகின்றன. இரத்தப் பிளாஸ்மாவிலுள்ள கொழுப்பு அமிலங்களும், கீட்டோன் என்கிற நச்சுப்பொருட்களும் அதிகரிக்கின்றன. அதே சமயம் பிளாஸ்மா சா்க்கரை அளவு குறைவதால், இன்சுலின் உற்பத்தி அளவு குறைந்து, குளூக்கான் உற்பத்தி அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல், உடலிலுள்ள காா்போஹைட்ரேட், புரதம், ஓய்வுநிலை வளா்சிதை நிகழ்வுகள், உடலின் வெப்பநிலை மற்றும் சுவாசத்தின் அளவு போன்றவையும் அதிகரிக்கின்றன. இப்படியான சூழலில் மருத்துவ ஆலோசனையில்லாமல் ஒருவர் இரண்டு நாள்களுக்கு மேல் விரதமிருந்தால் முடி உதிர்தல், தோல் வறட்சி, தோலில் சுருக்கம் விழுதல், மூளையில் பாதிப்பு, நினைவாற்றல் இழப்பு எனப் பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.

ஆகவே, மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் நீண்ட நாள் விரதத்தைத் தொடர்வது சரியானதல்ல என்று பேராசிரியர் சீத்தாராம் பரிந்துரைக்கிறார். ஒருவர் 24 மணி நேரங்களுக்கு மிகாமல் விரதம் இருக்கலாம். ஆனால் ஏற்கெனவே, உடலில் பாதிப்பு இருப்பவர்கள் விரதம் இருக்கும் முன் கண்டிப்பாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

இதையும் படிங்க:வரலட்சுமி விரதம்- பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.