ETV Bharat / bharat

கோவிட்-19 தொற்றை கையாளுவதில் இந்தியாவின் பங்கு - கரோனா வைரஸ் அச்சுறுத்தல்

கரோனா வைரசானது மிகப் பெரிய அகங்காரம் கொண்டது. நீங்கள் வெளியே சென்று அதை அழைக்காவிட்டால் ஒழிய அது உங்கள் வீட்டிற்குள் வராது.

Corona
Corona
author img

By

Published : Mar 22, 2020, 10:21 PM IST

Updated : Mar 22, 2020, 10:28 PM IST

ஜெர்மனியின் இரும்புப் பெண்மணி எனப்படும் அதிபர் ஏஞ்சலா மார்க்கேல், அவருடைய 15 ஆண்டு கால பதவிக் காலத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ”சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி ஒன்றாக ஆக்கப்பட்டபோது முதல், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அனைவரும் கைகோர்த்து களமிறங்க வேண்டிய அளவுக்கு, இப்படியான ஒரு பெரிய சவால் எதுவும் நமது நாட்டுக்கு நேர்ந்திருக்கவில்லை” என்றார்.

கரோனா நெருக்கடிக்குக் காரணமான கரோனா வைரசை அவர் ’சீனத் தயாரிப்பு’ (மேட் இன் சைனா) என்று குறிப்பிட்டார்.

கடந்த 21ஆம் தேதி நிலவரப்படி, ஜெர்மனியில் 22 ஆயிரத்து 364 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில் 84 பேருக்கு உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த இறப்பு வீதமானது 0.37 விழுக்காடு ஆகும். (உலகளாவிய இறப்பு வீதம் சராசரி 4.26 விழுக்காடு)

இது ஒருபுறம் என்றால், இத்தாலியில் மிகவும் வருந்தத்தக்க வகையில் 4,825 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 53, 578 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில் ஜெர்மனி என்ன செய்தது? இத்தாலி என்ன செய்யவில்லை? இந்தியாவுக்கு இதில் ஏதாவது படிப்பினை உண்டா? இதுவரை இந்தியா எந்த அளவுக்கு கடந்து வந்திருக்கிறது? இந்த கோணத்தில் அணுகுவது பொருத்தமானதாக இருக்கும்.

கடந்த 16ஆம் தேதி ஜெனிவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அத்னாம் ஜிப்ரியேசிஸ், பரிசோதனைக்கு அழுத்தம் கொடுத்தார். எல்லா நாடுகளுக்கும் நாங்கள் சொல்லக்கூடிய ஒரு சேதி.. பரிசோதனை… பரிசோதனை.. பரிசோதனை.. சந்தேகப்படக்கூடிய அனைவருக்கும் பரிசோதனையைச் செய்யவேண்டும். கண்மூடித்தனமான இந்த பெருந்தொற்றை அவர்களால் சமாளிக்கமுடியாது என்றார்.

ஜெர்மனி இதை உள்ளார்ந்த ஒன்றாக எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு சாதாரண நோயாளிக்கும்கூட பரிசோதனையைத் தீவிரப்படுத்தியது. இந்தியாவைப் போல, அங்கும் பள்ளிகளும் பொது இடங்களும் மூடப்பட்டன; பொதுமக்கள் கூடுதலுக்கு தடைவிதிக்கப்பட்டது. விரைவில் முடக்க நிலையை நோக்கிச் செல்லக்கூடும். மற்ற நாடுகளைப் போலவே, புதிதாக ஏற்படும் நோய்த் தாக்கத்திலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை சந்தித்தது. மார்ச் 10ஆம் தேதி 341ஆக இருந்த புதிய நோய் தாக்க எண்ணிக்கை, 20ஆம் தேதியன்று 4,528 ஆக அதிகரித்துவிட்டன. மருத்துவ வல்லுநர்கள் இதை சமூக ரீதியிலான நோய்ப்பரவல் என்று குறிப்பிடுகின்றனர். எவ்வளவு காலத்துக்கு இது நீடிக்கும் என்று யாரும் சொல்லவில்லை.

நெருக்கடியான இந்த சவாலின் அளவைப் புரிந்துகொண்டு செயலூக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. போக்குவரத்து தடங்கல் இருந்தபோதும், பிப்ரவரி 1 முதல் சீனாவின் வூஹான் நகரத்திலிருந்து இந்தியர்களை நாட்டுக்குக் கூட்டிவரும் பணியில் அரசாங்கம் இறங்கியது. பிப். 4ஆம் தேதியன்று சீனாவிலிருந்து யாரும் இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. சீன நாட்டினருக்கு வழங்கப்பட்ட விசாக்களை இந்தியா ரத்து செய்தது. இந்தத் தடையானது, படிப்படியாக ஜப்பான், தென்கொரியா, ஐரோப்பா, மலேசியா, ஈரான், வளைகுடா மற்றும் சில நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது இன்று (மார்ச் 22) முதல் வரும் 29ஆம் தேதிவரை வான்வெளியை மூடுவதென இந்தியா முடிவு எடுத்துள்ளது.

மார்ச் 9 ஆம் தேதி முதல், இந்தியாவின் 1.1 பில்லியன் செல்லிடப் பேசிப் பயன்பாட்டாளர்களுக்கு, கோவிட் -19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான பதிவுசெய்யப்பட்ட பிரச்சாரம் ஒன்று ஒவ்வொரு அழைப்பிலும் கேட்கும்படி செய்யப்பட்டது. " சோப்பு போட்டு கைகளைக் கழுவுங்கள்; உங்கள் முகம், கண்கள், மூக்கைக் கைகளால் தொடுவதைத் தவிர்க்கவும்." என்பதுதான் அந்த விளம்பரத்தின் சாரம். ஒரு துணைக்கண்ட அளவிலான நம்முடைய தேசத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு வெற்றிகரமான பிரச்சாரமாக இது அமைந்தது.

அப்போது முதலே கூடுவதிலிருந்து தனித்திருத்தலை நடைமுறைப்படுத்துவதற்கும் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கும் அதிகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 18 அன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘உறுதியும் கட்டுப்பாடும்’ வேண்டுமென வலியுறுத்திக் கூறினார். அதிகப்படியான பயம் அல்லது மனநிறைவு ஆகிய இரண்டுமே கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். மார்ச் 22 ஞாயிற்று அன்று ‘மக்கள் ஊரடங்கில்’ மக்கள் தன்னார்வத்துடன் பங்கேற்க வலியுறுத்தியதன் மூலம், நாட்டை பகுதி அளவோ அல்லது முழுமையாகவோ முடக்க நிலைக்கு அவர் தயார்ப்படுத்துகிறார். இது, போருக்கு முந்தைய ஒரு முழு ஒத்திகையைப் போன்றது ஆகும். மேலும், இந்தப் போரில் எதிரி வலிமை மிக்கதாகவும் இன்னதென அறியப்படாததாகவும் கண்ணுக்குத் தெரியாததாகவும் இருப்பது கூடுதல் சிக்கலும் ஆகும்.

சந்தேகத்துக்கு உள்ளான கோவிட் -19 நோயாளிகளைக் கண்டறிவது, பரிசோதிப்பது ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.மார்ச் 20ஆம் தேதிவரை 14, 514 பேர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது குறைவாக உள்ளது. தென்கொரியாவில் (மக்கள்தொகை 51 மில்லியன்) 316,664 சோதனைகளை நடத்தப்பட்டு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. எனவே, வெளிநாட்டிலிருந்து கூடுதலாக ஒரு மில்லியன் பரிசோதனைக் கருவிகள் வாங்கப்பட்டு வருகின்றன. கூடுதலான பரிசோதனைக் கருவிகளை இங்கேயே உற்பத்திசெய்வதற்கான முனைப்புகளிஉம் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இது, இந்தியாவின் பொறுப்புணர்வையும் பிரதமர் மோடியின் நோக்கையும் காட்டுகிறது. உள்நாட்டில் பிரச்னையைக் கையாளுவதுடன் நம்முடைய வளங்களையும் திறன்களையும் அண்டை நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவும் விருப்பத்துடன் இருக்கிறது. கடந்த மாதம் சீனாவுக்கு முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் சில பொருட்கள் என 15 டன் அளவுக்கு இந்தியா வழங்கியது. மாலத்தீவு, பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நாடுகளும் டெல்லியின் உதவியைக் கோரியுள்ளன. மார்ச் 15 அன்று காணொலிக்காட்சி மூலம் சார்க் நாடுகளுடனான மாநாட்டை மோடி நடத்தினார். கொரோனா வைரசைச் சமாளிக்க சார்க் அநாடுகளின் அவசர நிதியை உருவாக்க அவர் முன்மொழிந்தார். அத்துடன், நம்முடைய பங்காக முதல் கட்டமாக 10 மில்லியன் டாலர் வழங்குவதாகவும் அறிவித்தார். அவருடைய யோசனையை ஏற்று சவுதி அரேபிய இளவரசர், விரைவில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டை காணொலிக்காட்சி மூலம் கூட்டி இதற்கான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பார்.

கொள்ளைநோயுடன் எதிர்த்து விரட்ட இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கணிப்பது சாத்தியம் இல்லை. இருப்பினும், மனித இழப்புகளைத் தாண்டி, பெரும் பொருளாதார அழிவையும் உண்டாக்கும் என்பது மட்டும் உறுதி. இதைப்போலவே இந்தியா உள்பட்ட உலக நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு இருந்தன. இந்த நெருக்கடியின் காலம் மற்றும் பாதிப்பைப் பொறுத்து, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதமானது, 0.5 முதல் 1% வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 87 டிரில்லியன் டாலராக உள்ளநிலையில், இது குறைந்தது 500 பில்லியன் டாலர் முதல் ஒரு டிரில்லியன் டாலர்வரை பாதிக்கச்செய்யும். அதாவது, இன்னொரு பொருளாதார மந்த நிலையை உருவாக்கும். எல்லா நாடுகளும் இப்போதைக்கு தங்களின் பொருளாதார எதிரிகளுடன் சண்டையிடுவதற்கு முன்னர், தங்கள் குடிமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் நோய்ப் பரவலை அழிக்கவும் தம் சக்திகளைக் களமிறக்கி விட்டுள்ளன.

அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒரு நெருக்கடியைக் கையாள்வதில் நாடு ஒற்றுமையுடன் செயல்படுகிறது என்பது ஊக்கமளிப்பதாக இருக்கிறது. சமூக அளவில் நோய் பரிமாற்றம் எனும் மூன்றாம் நிலை கட்டத்தில், தனித்திருப்பது, அதிகமான கட்டுப்பாடு மற்றும் நீடித்த கண்காணிப்பு ஆகியவை முக்கியம். "இந்த வைரசானது மிகப் பெரிய அகங்காரம் கொண்டது. நீங்கள் வெளியே சென்று அதை அழைக்காவிட்டால் ஒழிய அது உங்கள் வீட்டிற்குள் வராது" என எய்ம்ஸ் மருத்துவமனையின் வல்லுநர் ஒருவர் சொன்னது, பொருத்தம்!

Last Updated : Mar 22, 2020, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.