கரோனாவுக்கு எதிராக இந்தியா கடுமையாகப் போராடி வரும் நிலையில், அதில் தங்களது பங்கும் இருக்க வேண்டும் என எண்ணி, டெல்லி ஐஐடி மாணவர்கள் சிலர் குறைந்த விலையில் தரமான முகக்கவசங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய டெல்லி ஐஐடி மாணவர் ஹர்ஸ் லால், "இந்தியா கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், பெரும்பாலான மக்களுக்கு நல்ல முகக்கவசங்கள் கிடைப்பதில்லை. கிராமப்புறங்களிலுள்ள மக்கள் பலரும் கைக் குட்டைகளையும், சிறு துணிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
சந்தைகளில் முகக்கவசங்கள் கிடைத்தாலும் எளிய மக்கள் வாங்கும் விலைகளில், அவைகள் இல்லை. இதுகுறித்து பல்வேறு செய்திகளை ஊடகங்களின் வாயிலாக அறிந்ததன் விளைவாகவே குறைந்த விலையில், தரமான முகக்கவசங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.
குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள மக்கள் பயன்பெறவே இந்த முயற்சியில் ஈடுபட்டோம். என்- 95 முகக்கவசங்களைவிட தரமானதாக, உருவாக்கவுள்ள இந்த முகக்கவசங்கள் பூஞ்சை தாக்குதல், பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளாகாத வகையில் இருக்கும்.
இது அடுத்த வாரம் முதல் மக்களுக்குக் கிடைக்கும் வகையில், சந்தைப்படுத்தவுள்ளோம். இந்த முகக்கவசத்தின் விலையை 27 ரூபாயாக நிர்ணயித்துள்ளோம். இதனை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈகை திருநாள் வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜி!