ETV Bharat / bharat

யெஸ் வங்கிக்கு கை கொடுக்கும் ஐசிஐசிஐ!

டெல்லி: கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

author img

By

Published : Mar 13, 2020, 8:06 PM IST

வங்கியை நடத்த போதிய மூலதனம் இல்லாமல் நிதி நெருக்கடியில் இருக்கும் யெஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, மற்றொரு தனியார் வங்கியான ஐசிஐசிஐ முன்வந்துள்ளது. இதற்கு நேற்று கூடிய ஐசிஐசிஐ வங்கியின் உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் யெஸ் வங்கியின் 5 விழுக்காட்டிற்கும் அதிகமான பங்குகள் ஐசிஐசிஐ வசம் செல்லும்.

முன்னதாக, வாராக் கடன், வருவாய் இழப்பு ஆகியவை காரணமாக யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. மேலும், ஏப்ரல் மூன்றாம் தேதி வரை யெஸ் வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து 50,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.

இதையடுத்து அந்த வங்கியின் பங்குகளை விற்று, முதலீடுகளைப் பெறும் நோக்கில் வங்கி புனரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, யெஸ் வங்கியின் 49 விழுக்காடு பங்குகளை வாங்குவதாக அறிவித்திருந்தது. தற்போது ஐசிஐசிஐ முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: யெஸ் வங்கியில் டெபாசிட் செய்த பணம் பத்திரமாக தான் உள்ளது - ஐ.பி.ஏ தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.