அன்றாட வாழ்க்கையில் நாம் பின்பற்றும் உணவு முறை, உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சாலையோர (ஜங்க் புட்ஸ) உணவகங்களில் உண்பதால் உடலில் உருவாகும் பாக்டீரியாக்கள் மூளையை பாதிக்கும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.
இதன் விளைவாக தான் மன ரீதியான பாதிப்புகளுக்குள் மக்கள் பெரும்பாலானோர் தள்ளப்படுகின்றன. மன ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் அதிக சத்தான உணவு பரிந்துரைக்கப்படுகிறது. சிறந்த மன ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இணைத்துக்கொள்வது முக்கியம். அத்தகைய சில உணவு வகைகளை இங்கு காணலாம்.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ள பழம் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
கவலை, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவும் தயிர், சார்க்ராட், தயிர் சாதம், இட்லி, கிம்ச்சி, ஊறுகாய் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த பிரவுன் அரிசி, தானியங்கள், ஓட்ஸ் போன்ற கார்போஹைட்ரேட்டுகளை சேர்க்க வேண்டும்.
மேலும், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நட்ஸ், விதைகள், நெய், வெண்ணெய், கானாங்கெளுத்தி மீன்கள் போன்ற கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால், சிந்தனை, நினைவாற்றல் மற்றும் மனநிலை மேம்படுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. அவை பெர்ரி, பச்சை இலை காய்கறிகள், மஞ்சள் போன்றவற்றில் காணப்படுகின்றன. டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (மற்றும் சர்க்கரை) உள்ளதால் மிதமான அளவில் சாப்பிடலாம்.
பச்சை இலை காய்கறிகள், முட்டை, பயிறு, பீன்ஸ் போன்றவற்றில் பி வைட்டமின் உள்ளதால் சாப்பிடலாம்.
சூரிய ஒளி மூலம் கிடைக்கும் பி வைட்டமினும் மனநிலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மெக்னீசியம் குறைபாடு உடலில் பாக்டீரியாக்கள் வழிவகுக்கிறது. டார்க் சாக்லேட், பாதாம், முந்திரி, கீரைகள், வாழைப்பழங்கள் மற்றும் பீன்ஸ் சாப்பிடுவதன் மூலம் மெக்னீசியம் அதிகரிக்கலாம்.
எனவே, எதையும் யோசித்து சாப்பிடுங்கள் மற்றும் சிறந்த மன நலனுக்காக மேலே குறிப்பிட்ட உணவுகளை இணைத்து கொள்வது நல்லது. இத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து வந்து கொண்டிருந்தால், உடனடியாக உணவு முறையை மாற்றிக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: கரோனாவை எதிர்க்கும் 'காளான் உணவு' - இந்திய ஆராய்ச்சியாளர்கள் தகவல்