பேரணிகளின்போது பிரதமர் உரையில் மாநிலத்தின் முக்கிய பிரச்னைகள் குறிப்பிடப்படும் என்றுதான் நம்புவதாக தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள அவர், "ஜேடியு-பாஜக கூட்டணி அரசாங்கத்தின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகும் பிகார் தேசிய சராசரி கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில் போன்ற துறைகளில் மிகக் குறைந்த தரத்தில் ஏன் இருக்கிறது என்று பிரதமர் இன்று மக்களிடம் கூறுவார் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிகார் மாநில சட்டப்பேரவைத் தொகுதியான சசாரம், கயா மற்றும் பாகல்பூரில் நடைபெறும் மூன்று பேரணிகளில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதி நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அன்றே அறிவிக்கப்படவுள்ளன.