கரோனா பரவலை தடுக்க நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகளோடு சேர்ந்து கூர்ந்து கவனித்து வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் நான்காம் கட்ட ஊரடங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை குறைத்து விட வேண்டாம், விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க நான்காம் கட்ட ஊரடங்கு மிகவும் அவசியம் அதனால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விதிமுறைகளை கடுமையாக மக்கள் பின்பற்ற வேண்டும் என உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இம்மாதம், 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆப்பிள் ஐஓஎஸ் 14 இயங்குதளத்தின் ஆகுமெண்டட் ரியாலிட்டி செயலி குறித்த தகவல் கசிவு!