நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் உணவக விடுதி , உணவகம் , விமானத்துறையில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில், இதே மாதத்தில் ஆட்கள் நியமிப்பதை கணக்கிட்டுப் பார்த்தால், மொத்தமாக 90 விழுக்காடு குறைந்துள்ளதாக நாக்குரி ஜாப் ஸ்பீக் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வேலை சரிவு பெருநகரங்களையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக டெல்லியில் 70 விழுக்காடும், சென்னை 62 விழுக்காடும், கொல்கத்தா 60 விழுக்காடும், மும்பை 60 விழுக்காடும் குறைந்துள்ளது.
இதுகுறித்து நாக்குரி தலைமை வணிக அலுவலர் பவன் கோயல் கூறுகையில், " நாங்கள் சமீபத்தில் ஊரடங்கால் வேலை இழந்த நபர்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அவர்களுக்குத் தான் எங்கள் நாக்குரி தளத்தில் முன்னுரிமை அளிக்கிறோம்" என்றார்.
மேலும், ஏப்ரல் மாதத்தில் மற்ற தொழில்களுடன் ஒப்பிடும்போது மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் 54 விழுக்காடும் , ஐடி நிறுவனங்கள் 49 விழுக்காடும், காப்பீடு நிறுவனங்கள் 42 விழுக்காடும் மட்டுமே பணியமர்த்தலில் குறைவாக உள்ளது.
இந்த ஊரடங்கால் பல துறைகளில் வேலைக்கு ஆட்கள் நியமிப்பது அதிகளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கோவிட்-19 குறித்து சுதந்திரமான ஆய்வு தேவை': ஆஸ்திரேலியத் தூதர்