ETV Bharat / bharat

ஹைதராபாத் ஐஐடியில் பதற்றம்... காவலர்களைத் தாக்கிய வெளிமாநில தொழிலாளர்கள்

author img

By

Published : Apr 29, 2020, 1:58 PM IST

Updated : Apr 29, 2020, 2:14 PM IST

்ே்
்ே்ே

13:20 April 29

ஹைதராபாத்: ஐஐடி வளாகத்தில் ஊரடங்கால் சிக்கித்தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், காவல் துறையினரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், வெளிமாநில தொழிலாளர்கள் அவ்வப்போது ஒன்றுகூடி தாங்கள் சொந்த ஊர் செல்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் ஐஐடி வளாகத்தில் கட்டுமான வேலை செய்துவந்த வெளிமாநில தொழிலாளர்கள், ஊரடங்கால் அப்பகுதியிலே சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சுமார் ஒரு மாத காலமாக வேலையில்லாமலும், செலவுக்கு பணம் இல்லாமலும் தொழிலாளர்கள் தவித்துள்ளனர். அவர்கள் வேறு பகுதிக்குச் செல்ல முயற்சி எடுத்தாலும், காவல் துறையினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.  

இந்நிலையில்,  திடீரென்று வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டனர். தகவலறிந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த காவல் துறையினர் அங்கு சென்றனர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியதையடுத்து, கற்களைக் கொண்டு தொழிலாளர்கள் காவலர்களையும் காவல் வாகனங்களையும் தாக்கியுள்ளனர்.  

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்பி சந்திரசேகர் ரெட்டி, தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: மாமியாரின் மண பந்தத்தைத் தாண்டிய உறவு... கண்டித்த மருமகன் கொலை: மூவர் கைது!

Last Updated : Apr 29, 2020, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.