நாடு முழுவதும் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களின் நலனைக் காக்கும்பொருட்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் பணிபுரிபவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்படாத பகுதிகளில் பணிபுரிபவர்களுக்காக மத்திய சுகாதார அமைச்சகம் சில வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. அவை:
- தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காகவும், தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க தொற்று நோய்க்கட்டுப்பாட்டுக் குழுக்களைச் செயல்படுத்துதல்
- நோய்த்தொற்றுகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், தொற்று நோய்க்கட்டுப்பாட்டு அலுவலர்களை நியமித்தல்
- மருத்துவமனைகளின் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்களின் பணிகளுக்கேற்ப தனிமனித பாதுகாப்பு உடைகள் அணிதல்
- சுகாதாரப் பணியாளர்கள் சுய உடல் பரிசோதனை மேற்கொள்ளும் பயிற்சி பெறுதல்
- மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் உடல்நிலை குறித்த அறிக்கையை சமர்ப்பித்தல்
- அனைத்து மருத்துவமனை ஊழியர்களையும் தொடர்ந்து உடல்வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்துதல்
- சுகாதார ஊழியர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மருந்துப் பொருள்கள் வழங்குதல்
- அடிக்கடி கைக்கழுவுவதை உறுதிசெய்தல், இரும்பும்போதும் - தும்மும்போதும் கைக்குட்டைகளைப் பயன்படுத்துதல், தகுந்த இடைவெளியினைக் கடைப்பிடித்தல்
- பணியின்போது கட்டாயமாகத் தனிமனித பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருத்தல்
- சுகாதாரப் பணியாளர்களைக் கூட்டாக அறிவித்து ஒருவருக்கொருவர் சுகாதாரத்தைப் பேண உதவுதல்
- கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு நோயெதிர்ப்பினை அதிகரித்தல், இவர்களை கரோனா தொற்றால் பாதிக்கப்படாத பகுதிகளில் பணியமர்த்துவதை உறுதிசெய்தல்
இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா தீவிரம்!