குஜராத் மாநிலம், கச்சு மாவட்டத்தில் உள்ள ஜக்கவ் துறைமுகம் அருகே அரபிக் கடலில் ஆள்ஆரவாரமற்ற சிறிய தீவுகளில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கடலோரக் காவல் படையினருக்குத் ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட கடலோர காவல்படை காவலர்கள், மூன்று வெவ்வேறு தீவுகளிலிருந்து மொத்தம் 88 பொட்டலங்களில் சாரஸ் என்ற ஹாஷிஷ் கச்சா போதைப் பொருளைக் கண்டுபிடித்தனர்.
இதன் மதிப்பு ரூ.1.32 கோடி ஆகும். இந்த கஞ்சா பொட்டலங்கள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று சமீபகாலங்களில் கடலில் அடித்து வரப்படும் ஹாஷிஷ் கஞ்சா போதைப் பொருள்களை குஜராத் காவல் துறையினரும், எல்லை பாதுகாப்புப் படையினரும் கைப்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!