ETV Bharat / bharat

காஷ்மீர் மக்களின் நில உரிமையை பாதுகாக்க புதிய சட்டம்! - காஷ்மீரின் சிறப்புத் தகுதியை நீக்கிய மத்திய அரசு

டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதி மக்களின் நில உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

govt-plans-to-enact-new-law-to-protect-land-rights-of-j-k-natives

author img

By

Published : Aug 9, 2020, 5:32 PM IST

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு நீக்கியது. இதனால், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சட்டங்கள் காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், காஷ்மீர் மாநிலமானது ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. மேலும், காஷ்மீரில் நடைமுறையிலிருந்த பல்வேறு சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன.

காஷ்மீரில் 15 ஆண்டுகள் வரை வசிக்கும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அவை தற்போது பத்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டன. காஷ்மீர் மக்கள் மட்டுமே, அரசுப் பணிக்காக விண்ணப்பிக்கும் முறையை மாற்றி நாட்டின் அனைத்து பகுதி மக்களும் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளும் நீக்கப்பட்டன. இந்நிலையில், சிறப்பு தகுதி நீக்கப்பட்டதால் காஷ்மீரில் ஏராளமான மக்கள் குடியேறத் தொடங்கியுள்ளனர். இதனால் காஷ்மீர் மக்களின் நில உரிமைகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காஷ்மீர் மக்களின் நில உரிமைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதிலிருந்து அங்கு தேர்தல் நடைபெறாததால் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாகத் தெரிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.