ETV Bharat / bharat

ஊடகத்தை வைத்து திசை திருப்புவதால் பொருளாதார சீரழிவை மறைத்துவிட முடியாது - ராகுல் காந்தி

டெல்லி: பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை விட்டு விட்டு ஊடகத்தின் மூலம் திசை திருப்புவதால் பொருளாதார சீரழிவை மறைத்துவிடாது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Aug 26, 2020, 2:36 PM IST

கரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதிலிருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இதற்கிடையே, பொருளாதார மந்தநிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஆர்பிஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்துவருவதாலும் பருவமழையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும் வளர்ச்சி பின்னோக்கி செல்லவுள்ளது. உலகளாவிய நிதி சந்தையின் வணிக விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கரோனா காரணமாக 200 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பொருளாதார செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு காரணமாக பண விநியோகம் குறைந்துள்ளது. 2018-19 ஆண்டை ஒப்பிடுகையில் 2019-20ஆண்டில் பண விநியோகம் 23.3 விழுக்காடு குறைந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

  • RBI has now confirmed what I have been warning for months.

    Govt needs to:
    Spend more, not lend more.
    Give money to the poor, not tax cuts to industrialists.
    Restart economy by consumption.

    Distractions through media won't help the poor or make the economic disaster disappear. pic.twitter.com/OTDHPNvnbx

    — Rahul Gandhi (@RahulGandhi) August 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்த வகையில், தான் எச்சரித்ததை ஆர்பிஐ உறுதிப்படுத்தியுள்ளது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் பல மாதங்களாக எச்சரித்துவந்ததை தற்போது ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

“அரசு செய்ய வேண்டியது: செலவு தான், கடன் கொடுப்பதல்ல”.

ஏழைகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். தொழிலதிபர்களுக்கு வரி குறைப்பு அல்ல. பொருளாதாரத்தை மீட்டெடுக்க செலவு செய்வதை அதிகரிக்க வேண்டும். ஊடகங்களை வைத்து திசை திருப்புவதும் பொருளாதார சீரழிவை மறைப்பதும் நாட்டிற்கு உதவாது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உ.பி.யில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 6 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.