மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புதிய திட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள சாலை உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பாரத் மாலா சிறப்பு திட்டத்தின் கீழ் 322 புதிய சாலை கட்டமைப்பு திட்டங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
34 ஆயிரத்து 800 கி.மீ சாலை கட்டமைப்பு திட்டத்திற்காக ரூ. 5.35 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள சரக்கு, பயணிகள் போக்குவரத்து செயல்பாடு சிறப்பான முன்னேற்றத்தை அடையும் எனவும், இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது வரை 2,921 கி.மீ சாலை கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், அடுத்த 12 ஆயிரம் கி.மீக்கான திட்டங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய சாலைத் திட்டங்கள் மூலம் எல்லை மற்றும் சர்வதேச சாலைகள், கடற்பகுதிகள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றையும் இணைக்கும் பணிகளை சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிங்க: 'இனி உணவுகளே சாப்பிட மாட்டேன்... பழங்கள் மட்டும்தான்' - தேர்தலில் சீட் கிடைக்காததால் எம்எல்ஏ அதிருப்தி!