ETV Bharat / bharat

இளம்பெண்களை விருந்தாக்கி அரசு ஒப்பந்தம்? - ம.பி.யில் கொடிகட்டிப் பறக்கும் பாலியல் ஊழல் - மத்தியப் பிரதேசம் ஹனி டிராப்

போபால்: ஹனி ட்ராப் பாலியல் வழக்கு (honey trap case) மத்தியப் பிரதேச அரசியல் தலைவர்களுக்கும் அரசு உயர் அலுவலர்களுக்கும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிறுவனத்துக்கு அரசு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Madhya Pradesh Honey Trap
author img

By

Published : Oct 5, 2019, 2:44 PM IST

ஹனி ட்ராப் வழக்கு

மத்தியப் பிரதேச மாநிலத்தை புரட்டிப்போட்டிருக்கும் வழக்கு ஹனி ட்ராப் (honey trap case). கல்லூரி, குடும்பப் பெண்களைக் குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் ஒன்றை காவல் துறையினர் கடந்த மாதம் கைது செய்தனர். மொத்தம் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொடர்பான காணொலிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் காணொலிகளில் காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர் கமல்நாத் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்துவரும் முக்கிய நபர் ஒருவரும் இந்த பாலியல் காணொலியில் இருக்கிறார். அவர் பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா போர்க்கொடி தூக்கியுள்ளது.

அமைச்சர் மீது புகார்

அவரை 'அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்' என்று குரல்கள் எழுந்து வருகின்றன. இவர்களைத் தவிர சில முக்கிய அரசு அலுவலர்களும் காவல் துறையினரின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர்.

இதற்கிடையில் ஹனி ட்ராப் வழக்கில் கைதாகியுள்ள பர்கா என்பவரின் கணவர் அமித் சோனி, இந்த வழக்குக்கும் பர்காவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறினார். தனது மனைவியை சிக்கவைக்க முயற்சிகள் நடப்பதாகப் புகார் தெரிவித்த அவர், நீதிமன்றத்தையே நம்பியிருப்பதாகவும் நீதி தம்மை கைவிடாது என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் பாலியல் தரகராக செயல்பட்ட இளைஞர் ஒருவரையும் காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். கல்லூரிப் பெண் ஒருவரை, அரசுப் பதவியில் முக்கிய பொறுப்பில் உள்ள பொறியாளர் ஒருவருக்கு விருந்தாக்கி அவரிடமிருந்து மூன்று கோடி ரூபாய் பறிக்கத் திட்டமிட்டபோது அந்த இளைஞர் சிக்கினார்.

இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு கிளிக் செய்யவும்: மத்தியப் பிரதேச பாலியல் வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றம்

அரசு ஒப்பந்தம்

இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிறுவனத்துக்கு கடந்தாண்டு அரசு ஒப்பந்தம் கிடைத்தது தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது. அந்த ஒப்பந்தத்தைப் பெற தடையாக இருந்த சில முக்கிய பிரமுகர்களுக்கு இளம்பெண்கள் விருந்தாக்கப்பட்டுள்ளனர். அதன்பின்னர், அணுமின் நிலைய அரசு ஒப்பந்தம் அந்நிறுவனத்துக்கு கைமாறியுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த நரோரா அணுமின் நிலைய வழக்குரைஞர் மனோகர் தலால், “போபாலை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனத்திடமிருந்து ரூ.10 லட்சத்துக்கு மின் வயர்கள் வாங்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசமான நிகழ்வுகளைப் பயன்படுத்தி ஒப்பந்தங்களைப் பெற முடியுமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனத்திடமிருந்து வேறு ஒப்பந்தங்கள் எதுவும் தற்போது இல்லை” என்றார்.

கோரிக்கை

ஹனி ட்ராப் புகாரில் சிக்கியுள்ள தனியார் நிறுவனம் மேலும் சில அரசு ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஹனி ட்ராப் பாலியல் தொழில் வழக்கின் தீவிரம் கருதி, நீதிமன்றம் இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வசம் ஒப்படைத்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்கலாமே

பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகர் கைது..!

ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.