ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள், தங்களது நேரத்தினை செல்போனில் படம் பார்ப்பது, வித விதமாக சமையல் செய்வது போன்றவற்றில் செலவிட்டு வந்தனர். ஆனால் சிலர் இந்தக் காலத்தை தங்களுக்கு உபயோகமாகவும் மாற்றிக்கொண்டனர். அந்த வகையில், தாஜ்மஹாலேயே தங்கத்தில் செதுக்கியுள்ளார் கர்நாடகாவின் கோல்ட்ஸ்மித்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் நாகராஜ். இவர் நகைப் பட்டறைத் தொழில் செய்பவர் என்ற காரணத்தினால் அப்பகுதி மக்கள் கோல்ட்ஸ்மித் நாகராஜ் என்று தான் இவரைச் செல்லமாக அழைப்பார்கள். ஊரடங்கால் வீட்டில் செய்வதறியாவது திகைத்த நாகராஜ், தங்கத்தினைக் கொண்டு சிறிய அளவிலான தாஜ்மஹாலை உருவாக்கியுள்ளனர். இதுமட்டுமின்றி அதில் ’ஐ லவ் இந்தியா’, ’ஐ லவ் மோடிஜி’ போன்ற பல வாசகங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
இந்த கோல்ட் தாஜ்மஹால் 16.990 கிராம் எடையும், 4 செமீ நீளமும், 3.5 செமீ அகலமும் கொண்டது. தங்கத்திலான தாஜ்மஹாலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளதால், பலரும் கோல்ட்ஸ்மித் நாகராஜின் வியப்பூட்டும் செயலுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே தங்கத்தில் உலகக் கோப்பை, சந்திரயான் உருவ அமைப்பை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயிலில் சிவலிங்கம் கண்டெடுப்பு!