குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை இன்று (நவ.14) தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியின் 39ஆவது பதிப்பு இதுவாகும். எளிதில் தொழில் தொடங்குவோம் (Ease of Doing Business) என்ற கருப்பொருளில் இந்தக் கண்காட்சி நடக்கிறது. எளதில் தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில், 2014ஆம் ஆண்டு இந்தியா 142ஆவது தரவரிசையில் இருந்தது.
தற்போது இந்தியாவின் தனித்துவமான சாதனைகளால் 64ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வர்த்தக கண்காட்சி குறித்து இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் சஞ்சய் வசிஷ்டா நமது ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:
இந்த ஆண்டு கண்காட்சியில் சுமார் 800 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும் பல நிறுவனங்களின் கணிசமான பங்களிப்பு உள்ளது. எளிதில் தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் தரவரிசை மேம்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பிகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மையமாக இருக்கும்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கண்காட்சி அரங்குகள், பிராந்திய கலை மற்றும் கலாசாரம், உள்ளூர் கைவினைப்பொருள்களை ஊக்குவிக்கும் வகையிலும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளும் கலந்துகொள்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவின் பீம் செயலி, சிங்கப்பூரில் பயன்பாடு