ETV Bharat / bharat

இலவச அரிசி வழங்கும் தீர்மானம் - நிராகரித்த கிரண்பேடி!

author img

By

Published : Sep 7, 2019, 6:53 PM IST

புதுச்சேரி: ரேஷனில் இலவச அரிசி வழங்குவது தொடர்பான தீர்மானத்தை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நிராகரித்தார்.

முதலைமச்சர்

புதுச்சேரி மக்களுக்கு ரேஷனில் இலவச அரிசி வழங்குவதற்கு பதில், அதற்கான பணத்தை வங்கி கணக்கில் சேர்க்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை எதிர்த்து அரிசி மட்டுமே வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இலவச அரிசி வழங்கும் கோரிக்கையை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நிராகரித்தார்.

ரேஷனில் இலவச அரிசி வழங்கும் தீர்மானத்தை நிராகரித்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

இந்நிலையில், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முதலைமச்சர் நாராயணசாமி தலைமையில் அரசு தீர்மானத்தின் நகலுடன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்திக்க சென்றனர். பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், ' புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்ற தீர்மானத்தை ஆளுநர் கிரண்பேடி நிராகரித்தார். இது குறித்து, மத்திய அரசிடம் புகார் அளிப்போம் நீதிமன்றத்தை நாடுவோம்' என்றார்.

Intro:இலவச அரிசிக்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்காத காரணத்தால் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்

Body:புதுச்சேரி மாநில மக்களுக்கு பணத்திற்கு பதிலாக இலவச அரசியாக வழங்க வேண்டும் என்று புதுவை அரசு தொடர்ந்து கூறி வருகிறது இதற்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தர மறுக்கிறார் இந்த நிலையில் புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரில் பொதுமக்களுக்கு இலவச அரிசி தான் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று அமைச்சர்கள் கந்தசாமி மல்லாடி கிருஷ்ணாராவ் ஷாஜகான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி தீபாய்ந்தான், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா வெங்கடேசன் ஆகியோர் அரசு தீர்மானத்தின் நகலுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர் அங்கு அவர்கள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சந்தித்து புதுவை மக்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர் இக்கூட்டத்தில் அரைமணி நேரம் போராடியும் இலவச அரிசியை வழங்க ஒத்துக் கொள்ளாத காரணத்தால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையில் கூட்டத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க ஆளுநர் கிரண்பேடி மறுக்கிறார் ஆகவே வெளிநடப்பு செய்துள்ளோம் அவரது செயல் குறித்து மத்திய அரசிடம் புகார் அளிப்போம் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக கூறினார்

பேட்டி முதல்வர் நாராயணசாமி

Conclusion:இலவச அரிசிக்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்காத காரணத்தால் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.