ETV Bharat / bharat

விவசாயிகளுக்கு ஆதரவாக விருதினை துச்சமென மதித்த முன்னாள் முதலமைச்சர்! - விவசாயிகள் போராட்டம்

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் திருப்பி அளித்துள்ளார்.

பிரகாஷ் சிங் பாதல்
பிரகாஷ் சிங் பாதல்
author img

By

Published : Dec 3, 2020, 2:37 PM IST

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எட்டாவது நாளாக தொடர்ந்து நடைபெறும் நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.

மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விமர்சித்து வருகின்றன.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் திருப்பி அளித்துள்ளார். மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.