உலகம் முழுவதும் கரோனா பாதிப்பை தடுக்கும் நோக்கில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றும் வருகின்றன. இந்த நோய் தொற்றை குணப்படுத்த தனியாக எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில், மலேரியா, எச்.ஐ.வி போன்ற நோய்களுக்கான மருந்துகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், பாராசிடமால் போன்ற மருந்துகள் பெருமளவில் உபயோகிக்கப்படுகின்றன.
மேற்கண்ட மருந்துகள் நல்ல பலன்களை தரும் நிலையில், தற்போது ப்லூவாக்சோமைன் என்ற மருந்தும் நல்ல பலன்களை தருகின்றன என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ள முடிவில், ஓசிடி எனப்படும் அப்சசிவ் கம்பள்சிவ் டிசாடர் என்ற வியாதிக்கு உபயோகிக்கப்படும் ப்லூவாக்சோமைன் மருந்து கரோனா நோயாளிகளுக்கு நல்ல பலன்களை தருகிறது எனவும் குறிப்பாக 60 வயதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்து சிறப்பான பலன்களைத் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காலத்தில் இந்தியா சார்பில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், பாராசிடமால் உள்ளிட்ட மருந்துகள் வர்த்தக நோக்கிலும், மனிதநேய அடிப்படையிலும் 55க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' - நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வழிமுறைகள் என்னென்ன?