கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், இடம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். பல மாநிலங்களில் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு இடம்பெயர் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இடம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க, மத்திய அரசு ரயில்களை ஏற்பாடு செய்தது. இந்த ரயில்கள் அனைத்தும் வேறு எந்தப் பகுதியிலும் நிற்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸிலிருந்து இடம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கோண்டாவை நோக்கிச் சென்றது. உத்தர பிரதேச மாநிலத்தின் சீதாப்பூரை அந்த ரயில் மிதமான வேகத்தில் கடந்தபோது ஷாஜகான்பூரைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் ரயிலில் இருந்து குதித்தனர்.
இதனைக் கண்ட காவல் துறையினர், அவர்கள் அனைவரையும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்கும் ராகுல் காந்தி!