பாட்னா: பிகார் மாநிலம் முசாபர்பூர் அருகேயுள்ள குர்கனிப் பகுதியில் மீன் வளர்ப்புப் பண்ணைகள் அதிக அளவிலுள்ளன. இங்குள்ள மக்களுக்கு இதுவே பிரதான தொழிலாக இருந்துவருகிறது.
இந்நிலையில், வளர்ப்பு மீன்கள் அனைத்தும் திடீரென உயிரிழந்ததால், பண்ணை உரிமையாளர்கள், ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே அம்மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபுதுவித நோயாக இருக்குமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய மீனவர் ஒருவர் கூறுகையில், " மீன்கள் உயிரிழப்பால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும், உயிரிழப்பு குறையவில்லை" என்றார்.
இதுதொடர்பாக அரசு அலுலவர்களிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முறையான ஆய்வுக்கு பின்னரே மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19: இந்தியாவில் ஏழு மாதங்களில் இல்லாதளவிற்கு குறைவான பாதிப்பு