மத்திய டெல்லியில் உள்ள நிர்மன் பவனின் நான்காவது மாடியில் இன்று காலைதீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை அலுவலர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நிர்மன் பவனின் நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 9 மணியளவில் அழைப்பு வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறை விரைந்தது . ஆனால், 15 நிமிடங்களுக்குள் தீப்பிடித்து விட்டது.
அங்கு அமைந்துள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ள பிரிண்டர் மூலம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை” என்றார்.