15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைபடி, அதிகாரப் பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தின் மூன்றாவது சமமான மாதத் தவணையாக இன்று ( ஜூன் 10) 14 மாநிலங்களுக்கு 6 ஆயிரத்து 195 கோடியை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது. கோவிட்-19 நெருக்கடி காலத்தில் இது அவர்களுக்கு கூடுதல் ஆதாரங்களை வழங்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஏப்ரல் 3 மற்றும் மே 11ஆம் தேதிகளில் ஆந்திரா, அசாம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணையாக அமைச்சகம் இதேபோன்ற தொகையை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.