நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இதில் முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், முழு பட்ஜெட்டை அடுத்த மாதம் 5ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள அம்சங்கள் குறித்து பல்வேறு துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்றும் ஆலோசனை நடத்தினார். இதில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூரும் கலந்து கொண்டார்.