ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 கணக்குகளை நீக்கிய பேஸ்புக்

டெல்லி: காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய 687 பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்
author img

By

Published : Apr 1, 2019, 4:59 PM IST

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தனது விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியின் ஐடி செல்லுடன் (தொழில்நுட்பப் பிரிவு) தொடர்பு கொண்ட 687 பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பதிவுகளுக்காகவோ போலி செய்திகளுக்காகவோ இந்த கணக்குகள் நீக்கப்படவில்லை என்றும், பேஸ்புக்கின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பேஸ்புக் இணைய பாதுகாப்பு பிரிவுத் தலைவர் நத்தானியல் கிளைச்சர் (Nathaniel Gleicher), இவை போலி கணக்குகள் மூலம் தங்கள் அடையாளத்தை மறைத்து, ஒருங்கிணைந்து மக்கள் மனதில் தவறான கருத்துக்களை பரப்ப முயற்சி செய்ததற்காக நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது போன்ற கணக்குகளை பேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், பேஸ்புக் மூலம் மக்கள் மனிதில் தாக்கத்தை ஏற்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 103 பக்கங்கள், கணக்குகள் மற்றும் குழுக்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

நாட்டில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவற்றின்மூலம் மக்கள் மனிதில் தாக்கத்தை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பல விமர்சனங்களை சந்தித்து வந்த பேஸ்புக், தனது தளத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக தேர்தல் தொடர்பான பதிவுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.