மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் விமன் நகர்ப் பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் ராணுவ புலனாய்வுத் துறையினர், புனே காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, 44 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய கரன்சி கள்ள நோட்டுகளையும், நான்கு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க கரன்சி கள்ள நோட்டுகளையும் பறிமுதல்செய்தனர்.
இது தொடர்பாக ஷேக் ஆலிம் குலாப் கான் (ராணுவ வீரர்), சுனில் சர்தா, ரித்தேஷ் ரத்னக்கர், துஃபைல் அகமது முகமது இஷாக் கான், அப்துல் கானி கான், அப்துல் ரஹ்மான் அப்துல் கானி கான் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு பங்களாவில் அவர்கள் கள்ள நோட்டுகளை அச்சிட்டுள்ளது தெரியவந்தது.
பங்களாவிலிருந்து கேமராக்கள், இரண்டு துப்பாக்கிகள், ஒரு கணினி, ஒரு மடிக்கணினி, ஒரு அச்சு இயந்திரம் உள்ளிட்ட பொருள்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சொட்டு நீர் பாசனத்திற்காக மாநில அரசுகளுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!