மகாராஷ்ரா மாநிலம் மும்பையில் உள்ள காட்கோபர் பகுதியில் தொழிற்சாலையில் நேற்று மாலை தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு பெண் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவரைக் காணவில்லை.
விபத்து குறித்து, தீயணைப்புத் துறை அலுவலர் விஜயகுமார் பனிக்கிரஹி கூறும்போது, தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயை முழுமையாக அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவரை காணவில்லை அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது,மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொணடு வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:
ஆந்திராவுக்கு 3 தலைநகர் முடிவு? ஒப்புதல் அளித்ததா அமைச்சரவை?