ETV Bharat / bharat

டெல்லி தேர்தல்: வாக்காளர்களுக்கு ஈடிவி பாரத் வாயிலாக கேஜ்ரிவால் வேண்டுகோள்! - டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜிரிவால்

டெல்லி: இன்று நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு மந்தமாக உள்ள நிலையில், வாக்காளர்கள் அதிகளவில் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

AAP
AAP
author img

By

Published : Feb 8, 2020, 4:43 PM IST

டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாகக் காணப்படுகிறது. பிற்பகல் மூன்று மணிவரை 41 விழுக்காடு அளவே வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதுகுறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு அம்மாநில முதலமைச்சர் கேஜ்ரிவால் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், “டெல்லியில் வாக்குப்பதிவு மந்தமாக இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனவே வாக்காளர்கள் ஆர்வத்துடன் முன்வந்து வாக்களிக்க வேண்டும். குறிப்பாக பெண் வாக்காளர்கள் அதிகளிவில் முன்வந்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், கடந்தத் தேர்தலில் பெருவாரியான வாக்காளர்கள் அரசின் மீது வைத்த நம்பிக்கை காரணமாக நல்லாட்சியை ஆம் ஆத்மி அரசால் வழங்க முடிந்தது. மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் என மக்களின் தேவைகள் அனைத்தையும் டெல்லி அரசு தடையின்றி வழங்கிவருவதாகவும் கேஜ்ரிவால் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடியுரிமைச் சட்டத்தால் நாடே பாதிக்கும் - கனிமொழி எச்சரிக்கை

Intro:नई दिल्ली

Body:अरविंद केजरीवाल

Conclusion:समाप्त, आशुतोष झा
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.