டெல்லி: சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவர் அமர் சிங். இவர், உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி அமர்சிங் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென காலமானார்.
இதனால் மாநிலங்களவையில் அமர்சிங் வகித்துவந்த பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்துக்கு செப்டம்பர் 11ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கும். வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய செப்டம்பர் 1ஆம் தேதி கடைசி நாளாகும்.
வாக்குப்பதிவு செப்டம்பர் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை நான்கு மணி வரை நடைபெறும். அன்றைய தினம் ஐந்து மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
அமர் சிங், சமாஜ்வாதி கட்சி மற்றும் சுயேச்சை ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினர் அமர் சிங் காலமானார்