ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலிருந்து ஜோத்பூருக்கு சென்ற பேருந்து, டிரக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து ஜோத்பூர் எஸ்பி ராகுல் பார்ஹத் கூறுகையில், "பேருந்து எதிர் திசையில் வந்த டிரக்கின் மீது மோதியது. மேம்பாலத்தின் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் விபத்து நடைபெற்றது. கட்டுமான பணி நடைபெற்றுவருவதால் வாகனங்கள் செல்ல மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேருந்து ஓட்டுநரின் தவறான கணிப்பில் விபத்து நடைபெற்றது" என்றார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மூன்று குழந்தைகளை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்த தந்தை!