ஒருவர் பயன்படுத்திய பொருள்களை மற்றொருவர் பயன்படுத்துவதன் மூலம் கரோனா பரல வாய்ப்புள்ளது என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டதையடுத்து பல்வேறு மக்களும் ஒருவருடன் கைகளை குழுக்குவதை முழுமையாக தவிர்த்துவருகின்றனர். ஆனால் பொது இடங்களில் ஒருவர் பயன்படுத்திய பொருளை மற்றவர் பயன்படுத்துவதில் பல்வேறு மக்களும் தயக்கம் காட்டுகின்றனர்.
இவர்களது தயக்கத்தினை போக்கும் வகையில், பல்வேறு இடங்களில் பயன்படுத்தக்கூடிய காகிதத்தினால் 3டி வடிவில் செய்யப்பட்ட புதிய கருவி ஒன்றினை ஹைதராபாத்திலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.
இந்தக் கருவி கதவுகளை திறப்பதற்கும், ஏடிஎம் இயந்திரங்களில் எண்களை அழுத்துவதற்கும், விசைப் பலகையினை பயன்படுத்துவதற்கும், பொருள்களை நகர்த்துவதற்கும் உதவி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது கைகளைப் பயன்படுத்தி பிற பொருள்களைத் தொடுவதை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த கருவி தெர்மல் பிளாஸ்டிக்கை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கதன் பிடிகளுக்கு ஏற்றவாறு கையடக்க அளவில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிப்பட்டுள்ளது.
அதேபோல கொச்சியிலுள்ள கடல்சார் ஆய்வகம் காகிதப் பொருள்களை கிருமிநீக்கம் செய்யும் கருவி ஒன்றினை தயாரித்துள்ளது.
இரு பக்கங்களும் மூடுமாறு தயாரிக்கப்பட்ட இந்த கருவியில், காகிதங்களை நடுவில் வைத்து மூடினால் காகிதங்களை வெப்பமாக்கி அதிலுள்ள கிருமிகளை முழுவதுமாக அழிக்கிறது.
எனவே, இந்தக் கருவியைப் பயன்படுத்தி, ரூபாய் நோட்டுகள், அனுமதி தாள்கள், அலுவலகத்தின் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை கிருமி நீக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆரோக்கிய சேது, கிருமி நாசினி அவசியம் - ஏ.ஏ.ஐ அறிவுறுத்தல்