காங்கிரஸ் கட்சியிலிருந்து அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விலகியதையடுத்து முதலமைச்சர் கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவிருக்கிறது.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பேசுகையில், “நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி கவலைகொள்ளவில்லை, மாநிலங்களவைத் தேர்தல் மீதே கட்சியின் கவனம் உள்ளது” என்றார்.
மாநிலங்களவையில் காலியாகவுள்ள 55 சீட்களுக்கு வருகிற 26ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக 22 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அதில் ஆறு பேர் அமைச்சர்கள்.
இதையும் படிங்க : மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் - வீழ்ச்சியைச் சந்திக்கும் காங்கிரஸ்?