ETV Bharat / bharat

டெல்லி மெட்ரோ வழித்தடத்தின் முதல் தூண் நிறுவப்பட்டது!

டெல்லியில் ஜனக்புரி மேற்கு-ஆர்.கே. ஆஸ்ரம் மார்க்கில் 28.92 கிலோமீட்டர் தூரம் மெட்ரோ வழித்தடத்தில் பூமிக்கு அடியில் 4ஆம் கட்ட கட்டுமானப் பணி ஜூலை 17ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் முதல் தூண் வெற்றிகரமாக நிறுவப்பட்டது.

டெல்லி மெட்ரோ
டெல்லி மெட்ரோ
author img

By

Published : Jul 28, 2020, 12:00 AM IST

டெல்லி: ஜனக்புரி மேற்கு-ஆர்.கே. ஆஸ்ரம் மார்க் மெட்ரோ வழித்தடத்தின் முதல் தூண் வெற்றிகரமாக நிறுவப்பட்டது.

கரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலேயே வேலையாட்களைக் கொண்டு இந்தக் கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டன. இச்சூழலில் கேஷோபூர் எனும் இடத்தில் பூமிக்கு அடியில் இந்தத் தூணானது நிறுவப்பட்டுள்ளது.

டெல்லியில் ஜனக்புரி மேற்கு-ஆர்.கே. ஆஸ்ரம் மார்க்கில் 28.92 கிலோமீட்டர் தொலைவிற்கான மெட்ரோ வழித்தடத்தில், பூமிக்கு அடியில் 4ஆம் கட்ட கட்டுமானப் பணி ஜூலை 17ஆம் தேதி தொடங்கப்பட்டது. கிருஷ்ணா பார்க் விரிவாக்க மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் பூமிக்கு அடியில் இப்பணி தொடங்கியது. ஜனக்புரி மேற்கு மற்றும் கேஷோபூா் இடையே 1.4 கிலோமீட்டா் தூரத்திற்குப் பாதாள துளையிடும் இயந்திரங்கள், சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஊரடங்கு எதிரொலி: பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துவரும் மெட்ரோ!

இந்த வழித்தடத்தில் 22 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. இந்த வழித்தடத்தில் 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கட்டுமானப் பணி தொடங்கியது.

மெட்ரோ ரயில் திட்டத்தின் நான்காம் கட்டப் பணியில் 61.679 கிலோமீட்டர் தூரத்திற்குப் புதிய வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் 22.35 கிலோ மீட்டர் ரயில் பாதை பூமிக்கு அடியில் அமைக்கப்படும். 45 ரயில் நிலையங்கள் இந்த வழித்தடங்களில் இடம்பெறவுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.