தமிழ்நாட்டை சேர்ந்த விக்னேஷ், முகமது ஆஷிக், ஸ்டீபன் லேபாஹூ, மனோஜ் ஆகிய மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள வோல்காகிராட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை மேற்கொண்டுவந்தனர். இதனிடையே, வோல்கா ஆற்றில் மூழ்கி அவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்டு தரக்கோரி திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மாணவர்களின் உடலை மீட்டு தரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பாலு எழுதியுள்ள கடிதத்தில், "சென்னை, சேலம், திருப்பூர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நால்வரின் உடலை மீட்டுத் தர இந்திய தூதரக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சந்தோஷ் குமாரின் விசா காலாவதியானது. கரோனா காரணமாக விசாவை அவர் புதுப்பிக்கவில்லை. இதையடுத்து, மலேசிய காவல்துறை அவரை கைது செய்தது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கவும் டி.ஆர். பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படி: உயிருக்குப் போராடும் பிரணாப் முகர்ஜி