மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் விவசாயிகள்தொடர்ந்து போராடி வருகின்றனர்.
குடியரசு தினமான இன்று மிகப் பெரியளவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிராக்டர் பேரணிக்கு டெல்லி காவல் துறையினர் அனுமதி அளித்தனர்.
இந்நிலையில், பேரணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது, சஞ்சய் காந்தி டினாஸ்போர்ட் நகரில் காவல் துறையினர் கண்ணீர் புகைகுண்டு வீசினர்.
மேலும், அக்ஷர்ம்தம் என்ற பகுதியில் விவசாயிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
அதுமட்டுமின்றி டெல்லியின் கர்ணல் பைபாஸிலும், டெல்லி - உத்தரப் பிரதேச எல்லையான காசிப்பூரிலும் விவசாயிகளின் பேரணிகளை தடுக்கும் வகையில் காவல் துறையினர் வைத்திருந்த பேரிகார்டுகளை விவசாயிகள் உடைத்து தள்ளினர்.
இதனையடுத்து அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனால் தலைநகரில் பரபரப்பும், பதற்றமும் நிலவிவருகிறது.