டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் ராணுவத்திற்கான புதிய தலைமை கட்டடம் அமைப்படவுள்ளது. இந்த கட்டடத்திற்கு 'தல் சேனா பவன்' (Thal Sena Bhawan) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத் தலைமையக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் நிகழ்ச்சியில் பேசிய அவர்," புதிய சேனா பவனின் முதல் கல்லை நாங்கள் அமைத்துள்ளோம். இது நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஆயுதப்படைகளின் வெளியே அறியப்படாத வீரர்களை குறிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: இது 'ரத்தம்' அல்ல 'பால்' - ஃபிளமிங்கோ பறவையின் சிறப்பு காணொலி!